இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தல்- புதிய திகதியைத் தீர்மானிப்பதில் இழுபறி

உயர் நீதிமன்றத் தீர்ப்பு நாளை வெளியாகலாமென எதிர்ப்பார்ப்பு
பதிப்பு: 2020 ஜூன் 01 23:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 01 23:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கொழும்பில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சட்டச் சிக்கல் முடிவுக்கு வந்த பின்னர் உடனடியாகவே தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க முடியும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
 
உயர் நீதின்றத் தீர்ப்புக் கிடைக்கும் நாளில் இருந்து குறைந்தது மூன்று மாதங்கள் வரை தேவையென்றும் தேர்தல் ஏற்பாடுகள் தவிர்ந்து பிரச்சரங்களுக்காகக் குறைந்தது பதினொரு கிழமைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறிய மகிந்த தேசப்பிரிய தேர்தலை நடத்த ஏறக்குறை முன்று மாதங்கள் செல்லும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல், மற்றும் நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்பது மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமை வெளிவரலாமென இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன.

அனேகமாக தேர்தலை நடத்துவதற்காகான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க முடியும் என்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி இதழ் சரியானதெனவும் தீர்ப்பு வெளியாகலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த பன்னிரென்டு நாட்களாக இந்த விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.