இலங்கை ஒற்றையாட்சி அரசின்-

நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் அணி போட்டியிட முடியுமா? நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாமெனவும் எதிர்ப்பார்ப்பு
பதிப்பு: 2020 ஜூன் 05 22:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 06 19:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#sajithpremadasa
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்பதோடு கட்சியின் மத்திய குழுவிலும் அங்கம் வகித்திருந்தனர்.
 
இந்த நிலையில் வேறு ஒரு கட்சியின் பெயரிலும் வேறுறொரு சின்னத்திலும் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு மாறனது என்று குறிப்பிட்டு கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கோசல கேரத் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

கட்சியின் உறுப்புரிமைகளில் இருந்து பதவி விலகாமல் வேறு அரசியல் அணி ஒன்றை உருவாக்கி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தமை கட்சியின் யாப்புக்கு முராணனது என்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டபோது சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மனு மீதான விசாரணைக்கு முன்பாக இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்தும் கலந்துரையாடல் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்கா ஆகியோர் மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை, சஜித் அணியின் வேட்பு மனுக்களுக்கு இடைக்காலத் தடையுத்தரவு விதிக்கப்படலாமென்றும் இதனால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாமெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.