தமிழர் தாயகத்தின் வடமாகாணம்- யாழ்ப்பாணம்

முகமாலையில் போர்க்கால மனிதப் புதைகுழி- எலும்புக்கூடுகள் மீட்பு

நீதவானின் உத்தரவினால் அகழ்வுப் பணிகள் தற்காலிக நிறுத்தம்
பதிப்பு: 2020 ஜூன் 09 21:10
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 09 21:29
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் முகமாலைப் பிரதேசத்தில் போர்க்கால மனித எலும்புக்கூடுகளென அடையாளம் காணப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள், மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டால் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கைப் பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இன்று புதிதாக மனித எச்சங்கள் அடையாளம் காணப்படாததை அடுத்து அகழ்வு பணிகள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
 
கிளிநொச்சி முகமாலை வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்ற வரும் பகுதியில் எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பாக பளை பொலிசாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் முறைப்பாடு செய்ய்ப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாடு தொடர்பாகப் பளை பொலிசாரால் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு மாலை வேளை சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாவட்ட நீதிவான் மன்ற நீதிபதி த.சரவணராஜா 26 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

குறித்த திகதியில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டபோது ஒரு வருடைய எலும்புக்கூடு மூன்று துப்பாக்கிகள் ரவைகள் மகசீன்கள் தகட்டு இலக்கம் கைக்குண்டு சீருடைகள் போன்றவை மீட்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து கடந்த 02.07.2020 ஆம் திகதி அகழ்வு பணிக்கு திகதியிடப்படடிருந்து. அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்புாது ஒரு பெண்ணின் எலும்புக்கூடு மீட்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் நாளான இன்று எட்டு மகசீன்கள், துப்பாக்கி ரவைகள், மூன்று கைக்குண்டுகள், சில மனித எலும்புத்துண்டுகள், உடைகள் போன்றவை மீட்கப்பட்டன.

இன்று புதிதாக எலும்பு கூடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த அகழ்வு பணிகளை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவருமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அப்பகுதியில் தொடர்ந்தும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்படும் இடத்து அகழ்வு பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனை நிலையக் கட்டத்தின் அடியில் இருந்து மீட்கப்பட்ட இருநுற்றுக்கும் அதிகமான போர்க்கல மனித எலும்புக்கூடுகள் பற்றிய விசாரணைகள் அப்படியே கைவிடப்பட்டிருந்தன.

2016 ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயச் சுற்றாடலில் இருந்து மீட்கப்பட்ட சுமாா் இருநூறு மனித எலும்புக் கூடுகள் பற்றிய விசாரணைகளும் அப்படியே கைவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது யாழ் முகமாலைப் பிரதேசத்தில் மனித எலும்புகள், எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.