வடமாகாணம்

வவுனியாவில் வாள்வெட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயம்

இருவர் கைது- விசாரணைகள் ஆரம்பம்
பதிப்பு: 2020 ஜூன் 14 23:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 16 23:49
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வுடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இளைஞர்களிடையே வன்முறைக் காலச்சாரத்தை இலங்கை இராணுவம் திட்டதிட்டுத் தூண்டிவிடுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில். தொடர்ச்சியாக அங்காங்கே வாள் வெட்டுகள். ஆடிதடி மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் வடமாகாணம் வவுனியா மகாறம்பைக்குளம் பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துபேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அயலவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
 
இன்று ஞாயிற்றுக்கிழமைஇரவு 7.30க்கு மகாறம்பைக்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்மீறிச் சென்ற அடையாளம் தெரியாத இளைஞர்கள் சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டினர்.

வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்களையும் தாக்கிச் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் விட்டில் இரந்த் பெண் உட்பட ஐந்துபேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் உண்மையான குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.