இலங்கை ஒற்றையாட்சி அரசின் இழுபறி

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பணம் அச்சிட உத்திரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டா?

மூன்று மாதங்கள் சென்றுவிட்டதால் பணம் அச்சிடும் அதிகாரம் இல்லையென்கிறது எதிர்க்கட்சி
பதிப்பு: 2020 ஜூன் 23 22:07
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 23 22:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கைக்குக் கிடைத்த நிதியுதவிகள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய பதில் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றம் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கூட்டப்படாத நிலையில். கிடைத்த நிதியுதவிகளின் அளவுகளுக்கு ஏற்ப எவ்வாறு பணம் அச்சிடப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களான சுஜீவ சேனசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
நேற்று முன்னதிம் ஞாயிற்றுக்கிழமை சிங்களத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்குபற்றிய ஐக்கிய மக்கள் சக்கதி அணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுஜீவ சேனசிங்க, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேற்பட்டால். பணத்தை அச்சிடுவது தொடர்பான அதிகாரங்களை ஜனாதிபதி இழந்துவிடுவாரெனச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அதிகாரங்களை இழந்த நிலையிலும் கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவில் பணம் அச்சிடப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதென அவர் கூறினார்.

கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற சிறிய கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளதால் பணத்தை அச்சிடும் அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு பணம் அச்சிடப்பட வேண்டி அவசியத் தேவை இருந்தால், நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவை மீண்டும் கூட்டி ஆராய்ந்திருக் வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மேலதிகமாகப் பணம் அச்சிடப்படவில்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் செய்;தியாளர்களிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.