இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஜனாதிபதி இராணுவ ஆட்சி நடத்துவதாக ஐக்கியதேசியக் கட்சி குற்றச்சாட்டு

மக்களுக்கு விளக்கமளிப்பதாகக் கூறுகிறார் பாலிதரங்கே பண்டார
பதிப்பு: 2020 ஜூன் 29 22:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 29 22:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஜனாதிபதியாகப் பதவியேற்ற கடந்த ஏழு மாதங்களிலேயே இலங்கையில் இராணுவ ஆட்சியை கோட்டாபய ராஜபக்ச உருவாக்கியுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலிதரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இராணுவ ஆட்சி தொடர்பாகத் தங்போது மக்களுக்கு விளக்கமளித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சுயாதீனமாகச் செயற்பட வேண்டிய இலங்கைச் சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொழும்பு மாவட்ட வேட்பாளாருமான ரவி கருணாநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றார்.

இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு இடமளிக்க முடியாதென்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கும் எனவும் ரவி கருணாநாயக்கா குறிப்பிட்டார்.

அதேவேளை, இராணுவ ஆட்சி நடப்பதாக ஜே.வி.பியும் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தது. ஐக்கியதேசியக் கட்சி மீதும் ஜே.வி.வி குற்றம் சுமத்தியுள்ளது.