இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலில்

சிங்கள மக்களின் வாக்குகளினால் ஆட்சியமைப்போம்- மகிந்த

அபிவிருத்தி மூலம் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாம்
பதிப்பு: 2020 ஜூலை 03 22:28
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 03 23:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக் கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி சிங்கள மக்களினால் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய முடியுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். காலி பத்தேகம பிரதேசத்தல் நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அரசாங்கத்தை அமைத்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியுமென்றும் கூறினார். சென்ற புதன்கிழமை தமிழ் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியைச் தெரிவு செய்ய முடியுமென்பதைக் கடந்த தேர்தலில் சிங்கள மக்கள் நிரூபித்திருக்கிறார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

போரின் பின்னர் வடமாகாணம் சிறப்பாக அபிவிருத்தியடைந்துள்ளதென்று தமிழ் ஊடகவியலாளர்கள் தன்னி;டம் கூறியதாக மகிந்த ராஜபக்ச பத்தேகம மக்கள் சந்திப்பில் கூறினார்.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றும் மகிந்த ராஜபக்ச அந்த மக்கள் சந்திப்பில் கூறினார்.

ஆனாலும் சிங்கள மக்களின் பொரும்பான்மை வாக்குகளோடு ஆட்சியமைப்பதற்குரிய நிலையை சிங்கள மக்கள் தமது வாக்களிப்பின் மூலம் உருவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.