இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு உடன்படிக்கை இல்லை- சஜித் அணி மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 ஜூலை 27 23:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 23:58
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு எந்தவிதமான உடன்படிக்கைகளும் செய்யப்படவில்லையென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கூட்சியோடும் ஸ்ரீலங்காப் பொதுஜன பொரமுனக் கட்சி ஆகியவற்றுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேசியதாகவும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
 
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் ஆபத்தானது என்றார்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள சமஸ்டி ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி எற்றுக் கொள்ளவில்லை. ரணில் விக்கிரமசிங்கவோடும், மகிந்த ராஜபக்சவோடும் கலந்துரையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்திருக்கலnமென்றும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவை என்றும் வேடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி கோரிக்கையோ ஈழத் தமிழர் இறைமை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழ் கல்வியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.