இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்

பிரச்சாரங்களில் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு

அரச ஊழியர்களை ஈடுபடுத்துவதாகவும் முறைப்பாடு
பதிப்பு: 2020 ஓகஸ்ட் 01 23:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 01 23:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
#election
தேர்தல் பிரச்சாரங்களின்போது அரச ஊழியர்கள் வேட்பாளர்கள் பலருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமை. அரச சொத்துக்கள், அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ரட்ன்ஸ்பரன்ஸி இன்ரர் நஷனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. 150 முறைப்பாடுகளில் 137 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவையனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் ட்ரான்ஸ்பரன்சி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்கா ஒபயசேகர தெரிவித்துள்ளார். அரச உயர் அதிகாரிகளின் உத்தரவோடு அரச வாகனங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
 
பாலங்கள், புதிய கட்டடங்கள் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதற்கு அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தேர்தல் காலத்தில் இவ்வாறான அரசியல் நி;கழ்வுகள் நடத்த முடியாதென்றும் அசோக்க ஒபயசேகரா கூறியுள்ளர்.

நேற்று முன்தினம் 30ஆம் திகதி வியாழக்கிமை வரை பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்து உறுதிப்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர்கள், அரசதரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச சொத்துக்களைத் துஸ்பிரயோகம் செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரட்ன்ஸ்பரன்ஸி இன்ரர் நஷனல் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.