இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல்

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் பொய்யான பிரச்சாரங்கள்

வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி ஏமாற்று நடவடிக்கைகள்
பதிப்பு: 2020 ஓகஸ்ட் 04 22:12
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 04 22:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
புதன்கிழமை நடைபெறவள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63ஆயிரத்து 885பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 25 தேர்தல் மாவடடங்களிலும் உள்ள 12 ஆயிரத்து 774 தேர்தல் தொகுதிகளில் 12அயிரத்து 995வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோன வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
வன்முறை இடம்பெறும் பிரதேசங்களில் வாக்களிப்பு நிறுத்தப்பட்டு மீள் வாக்களிப்பு நடத்தப்படுமெனவும் மகிந்த தேசப்பிரிய கூயுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் சுமார் எண்பது சதவீதமான மக்கள் வாக்களிப்பரெனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, இன்று திங்கட்கிழமை முதல் வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதான நகரங்களிலும் பிரதான வீதிகளிலும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிக் போது கொழும்பபை மையப்படுத்திய சிங்களக் கட்சிகளின் முகவர்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமெனக் கூறி இளைஞர் யுவதிகளிடம் விண்ணப்பப்படிவங்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் தங்கள் கட்சிக்கே வாக்களிக்க வேண்டுமெனக் கூறியதாகவம் மக்கள் கூறுகின்றனர்.