ஜெனீவா

மனித உரிமைச் சபையில் இம்முறை இலங்கை விவகாரம் இல்லை?

கோட்டாபய அரசாங்கம் பிரேரணையில் இருந்து வெளியேறியமை காரணமா?
பதிப்பு: 2020 செப். 13 21:52
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 13 22:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இம்முறை இலங்கை பற்றிய விவகாரம் இல்லையெனத் தெரிய வருகின்றது. 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கூட்டத் தொடர் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறுமென நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது. மியன்மார், யேர்மன், கம்போடியா, கொங்கோ வெனிசுலா சிரியா தென்சூடான் ஆகிய நாடுகளின் விவகாரங்களும் மற்றும் மரண் தன்டனைச் சட்டங்கள் பற்றிய விவகாரங்களோடு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களுமே நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டுள்ளன. செப்ரெம்பர் மாதம் நடைபெறும் அமர்வில் இலங்கை தொடர்பாக மீளாய்வு செய்யப்படுவது வழமை. ஆனால் இம்முறை நிகழ்ச்சி நிரலில் மீளாய்வு பற்றிய விடயங்கள் எதுவுமே இல்லை.
 
2015ஆம் ஆண்டு மார்ச் மாத அமர்வில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இரண்டு வருட கால அவகாசமும் பின்னர் மேலும் இரண்டு வருடமும் அதன் பின்னர் மேலும் ஒன்றரை வருடகால அவகாசமும் வழங்கப்பட்டிருந்து.

இறுதியாகக் கொடுக்கப்பட்டிருந்த ஒன்றரை வருடகால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச் மாதமே நிறைவுபெறுகின்றது. இந்த நிலையிலேயே சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார்.

அதன் பிரகாரம் சென்ற ஓகஸ்ட் மாதம் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கத்தை அமைத்துள்ளது. வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றிருந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன. ஜெனீவாத் தீர்மானத்துக்கு இணை அணுசரனை வழங்குவதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

சென்ற மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்ட அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தீர்மானத்தில் இருந்து வெளியேறுவதாகக் கூறியிருந்தார்.

ஆகவே அதன் காரணமாக இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் தவிர்க்கப்பட்டதா அல்லது நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விவகாரங்கள் பேசப்படும்போது இலங்கை விவகாரம் எடுக்கப்படுமா என்பது குறித்து எதுவுதே அறிய முடியவில்லை.

இலங்கை வெளிவிவகார அமைச்சு நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வு பற்றி கருத்துக் கூறாமல் அமைதியாகவுள்ளது.