ஈழத் தமிழர்கள் ஏற்க விரும்பாத

13ஆவது திருத்தச் சட்டத்தையே புறக்கணித்த மகிந்த

பிரதமர் நரேந்திரமோடியிடம் உறுதியளிக்கவிவ்லை என்கிறது இலங்கை வெளியுறவு அமைச்சு
பதிப்பு: 2020 செப். 27 20:58
புதுப்பிப்பு: செப். 28 22:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மிலிந்தகொட உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சிங்கள அரசியல் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்திய- இலங்கை நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் சனிக்கிழமை காணொளி மூலமாக நடைபெற்றது. இதன்போதே நரேந்திரமோடி பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலரளர் அமித் நரங் புதுடில்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
 
ஆனால் மகிந்த ராஜபக்ச 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி பிரதமர் நரேந்திரமோடியுடன் எதுவுமே பேசவில்லையென இலங்கை வெளியுறவு அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு பிரதமர்களும் பேசிய விடயத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் முக்கிய விவகாரமாக இல்லையென்றும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விடயங்கள் குறித்தே பிரதானமாகப் பேசப்பட்டதென்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடி நடத்திய கலந்துரையாடலில், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகப் பேசினார். ஆனால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தவில்லை. அது குறித்து மகிந்த ராஜபக்சவும் உறுதிமொழி எதனையுமே வழங்கவில்லை என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, இந்திய இலங்கை இராஜந்திர உறவுகளை வலுப்படுத்த 15மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க பிரதமர் நரேந்திரமோடி இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச்செயலரளர் அமித் நரங் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் ஆகியோர் உள்ளிட்ட இலங்கை வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒருவாரத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்த கோட்டாபய ராஜபக்ச,13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியததென்றும் சிங்கள பெரும்பான்மை மக்களின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட முடியாதென்றும் கூறியிருந்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13ஆவது திருத்தச் சட்டம் ஆரம்ப முயற்சியாக அமையுமென பிரதமர் நரேந்திரமோடி கூறியபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதனை நேரடியாகவே மறுத்திருந்தமை தொடர்பாகக் கூர்மைச் செய்தித் தளம் செய்திக் கட்டுரை ஒன்றை அப்போது வெளியிட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பருமான முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சரவை அந்தஸ்துடன் இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொறகொட, 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென சமீபத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.