இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்-

பைடன் நிர்வாகம் கோட்டாபய அரசாங்கத்தை அரவனைக்கும்- இந்தியப் பத்திரிகையாளர் பாலச்சந்திரன்

அமெரிக்கா தொடர்பாக கூர்மைச் செய்தித்தளத்தில் வெளியான கட்டுரைகளுக்கு வலுச்சேர்க்கும் அவதானிப்பு
பதிப்பு: 2020 நவ. 10 22:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 10 23:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் இறங்கிச் செல்லுமெனவும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கையை அரவனைக்க வேண்டியதொரு தேவை அமெரிக்காவுக்கு உண்டெனவும் எமது கூர்மைச் செய்தித்தளம் தொடர்ச்சியாகச் செய்திக் கட்டுரைகளை எழுதிவருகின்றது. கடந்த 28ஆம் திகதி கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோ ஒற்றை ஆட்சி இலங்கையை ஆரத்தழுவிச் சென்றிருக்கிறாரெனவும் கூர்மைச் செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.
 
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள ஜே பைடன் நிர்வாகம் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடிய சாத்தியமில்லை என்று அரசியல் ஆய்வாளரும் இந்தியப் பத்திரிகையாளருமான பி.கே.பாலச்சந்திரன் கூறியிருக்கிறார்

இது அமெரிக்கா தொடர்பாக கூர்மையில் வெளியான செய்திக் கட்டுரைகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

பாலச்சந்தரன் கூறிய கருத்துக்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குல் என்ற தமிழ்த் தேசிய நாளிதழின் ஒன்லைன் செய்தித் தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிரசுரமாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரெனவும் அவருக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாகவும் சீனச் சார்புடைய ஒருவராக கோட்டாபய ராஜபக்ச இல்லையெனவும் கூர்மைச் செய்தித் தளம் 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் தனது செய்திக் கட்டுரைகளில் எழுதி வருகின்றது.

ஆனால் ஈழ மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், கோட்டாபய சீனச் சார்புடையவரென்றும், இதனால் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள், இலங்கைக்குக் கடும் நெருக்குதலைக் கொடுக்குமெனவும் அது ஈழத் தமிழர்களுக்கு வாய்ப்பாக அமையுமெனவும் தமிழ்ச் சமூகத்துக்கு நம்பிக்கையூட்டி எழுதி வருகின்றனர்.

சென்ற 28ஆம் திகதி மைக் பொம்பியோ கொழும்பில் நின்று இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள், ஈழ மற்றும் புலம்பெயர் தமிழ் ஆய்வாளர்கள் சிலருக்குக் கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்ததாகக் கூர்மைச் செய்தித் தளம் 28-09-2020 அன்று வெளியிட்ட செய்திக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில் அதற்கு வலுச்சேர்கும் வகையில் அமைந்த, தினக்குரல் ஒன்லைனில் வெளியான பி.கே.பாலச்சந்திரன் கருத்துக்களைப் பின்வருமாறு முழுமையாகத் தருகின்றோம்.

பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கமுடியும் என்றாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் அவசியம் என்பதால் கோத்தபாய ராஜபக் அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியமில்லை.

காலப்போக்கில் சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா அமைத்திருக்கும் குவாட் அமைப்புக்குள் இலங்கையை இழுப்பதற்கு பைடன் நிர்வாகம் முயற்சிக்கக்கூடும் என்றும் அவர்கள் முன்மதிப்பீடு செய்துள்ளது.

இலங்கையை சீனா கடன்பொறிக்குள் தள்ளிவிடுகிறது என்று பிரசாரங்களைச் செய்வதற்குப் பதிலாக இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு அமெரிக்கா வழிவகைகளை காணவேண்டும் என்று இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யோசனை தெரிவித்திருந்தார். பைடன் நிர்வாகம் அந்த யோசனையை அக்கறையுடன் பரிசீலிக்கக்கூடும்.

அமெரிக்காவின் முதலீடுகள் வரவேற்கப்படக்கூடிய துறைகள் பற்றிய பட்டியல் ஒன்றை கோத்தபாயவும் வெளியுறவு அமைச்சர் தினேஷ; குணவர்தனவும் பொம்பியோவிடம் கையளித்திருந்தனர். அமெரிக்காவை ஏனைய நாடுகளுக்கு நட்புபூர்வமானதாக்குவதற்கு பைடன் முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளின் ஒரு அங்கமாக ஜனநாயக நாடுகளை அரவணைத்துச் செல்வதில் அக்கறையுடையவராக பைடன் இருப்பதால், கோத்தபாயவுடம் தினேஷ் குணவர்தனவும் பொம்பியோவிடம் முன்வைத்த பட்டியலை அமெரிக்க புதிய நிர்வாகம் அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குள் மீண்டும் அமெரிக்கா இணைந்துகொண்ட பிறகு மனித உரிமைகள் மற்றும் இனநல்லிணக்க விவகாரங்களில் பைடன் கொழும்புடன் கடுமையாக நடந்துகொள்ளக்கூடிய சாத்தியம் இருப்பதாக இலங்கையில் அச்சம் நிலவுகிறது. ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பாரம்பரியமாக மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இலங்கை தொடர்பாக ஒபாமா நிர்வாகம் முன்னர் அவ்வாறு நடந்துகொண்டது.

அமெரிக்க துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸின் தாயார் ஒரு சென்னை தமிழப்பெண்மணி என்பதால், அவர் தமிழ்ப் பிரிவினைவாத இலட்சியத்துக்காகக் குரல்கொடுக்கக்கூடும் என்று சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் குறிப்பாக அச்சம் நிலவுகிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் கமலா ஹரிஸை அணுகுவதற்கு ஏற்கனவே நாட்டம் காட்டியிருக்கிறது என்று எச்.எல்.டி.மகிந்தபால நவம்பர் 8 ஆம் திகதி சண்டே ஒப்சேர்வரில் எழுதியிருக்கிறார். ஆனால் பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பிதற்காக இனநல்லிணக்கப் பிரச்சினைகளை கையிலெடுப்பதில் அக்கறை காட்டக்கூடும் என்கிற அதேவேளை, இலங்கையில் அதன் செல்வாக்கை ஆழமாகப் பதித்துவிட்ட கோத்தபாய அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கை கடைப்பிடிப்பது பெரும்பாலும் சாத்தியல்லை.

இந்து சமுத்திரத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான புவிசார் மூலோபாய தேவைக்கு இலங்கை அரசாங்கம் அவசியம் என்பதால் பைடன் நிர்வாகம் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காலப்போக்கில் குவாட் அமைப்புக்குள் இலங்கையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கக்கூடும்.

மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று கோதாபய அரசாங்கம் விரும்புகிற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் (எம்.சி.சி) உடன்படிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்த பைடன் இணங்கவும்கூடும் என்று பாலச்சந்திரன் கூறுகிறார்.