இலங்கை ஒற்றையாட்சி அரசின்

முப்படையினருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டு- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

போர் இல்லாத நிலையிலும் எதற்கு என்று விக்னேஸ்வரன் கேள்வி
பதிப்பு: 2020 நவ. 21 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 23:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கு 35ஆயிரத்து 515 கோடியே 91 இலச்த்து 50ஆயிரம் ருபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை மாலை இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
வாக்களிப்பில் 151 வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 52 வாக்குகளும் பெறப்பட்டன. 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பு வாக்களித்த அதேவேளை, எதிராக சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் வாக்களித்தன .

வாக்கடுப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி கலந்துகொள்ளவில்லை.

ரிசாத் பதியுதீன் விளக்கமறியலில் உள்ளதனால் அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படாத நிலையில் அவரின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் முஷாரவ். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யான இஷாக் ரஹ்மான். முஸ்லிம் கூட்டமைப்பு உறுப்பினர் யான அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாகவே வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்த்து வாக்களித்தபோதும் அவரின் கட்சி உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

கடந்த நவம்பர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையி சமப்பித்து உரையாற்றியிருந்தார்

நவம்பர் 18 ஆம் திகதி முதல் 21 வரையான நான்கு நாட்கள் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையிலேயே இன்று சனிக்கிழமை 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான குழு நிலை மீதான விவாதம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான 16 நாட்கள் இடம்பெற்று டிசம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடுவதற்காகவா பாதுகாப்பு அமைச்சுக்கு முபத்து 5ஆயிரத்து 515 கோடியே 91 இலச்த்து 50ஆயிரம் ருபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதென்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சருமான விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தின்போது விக்னேஸ்வரன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ் மக்களை எந்த நேரத்திலும் இந்த அரசாங்கம் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பாதாகவே அவர் குற்றம் சுமத்தினார்.