இலங்கை ஒற்றையாட்சி அரசின்

முப்படையினரின் அச்சுறுத்தல், தடைகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் அருட்தந்தை பாஸ்கரன் கைது-
பதிப்பு: 2020 நவ. 27 22:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 30 14:45
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசின் முப்படையினரின் தடைகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.05க்கு சுடரேற்றி உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளனர். சைவக் குருமார், அருட்தந்தையர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இராணுவத்தின் கடுமையான அச்சறுத்தல்களுக்கு மத்தியில் தங்கள் இல்லங்கள், அலுவலகங்கள், பொதுக் கட்டங்களுக்கு முன்பாக சுடரேற்றினர். இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மார்ட்டீனார் குருமடத்துக்கு முன்பாக சுடரேற்றிய குற்றச்சாட்டில், அந்தக் குருமடத்தின் பணிப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை இரவு அருட்தந்தை கைது செய்யப்பட்டதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
 
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் மூலமாகத் தடை விதித்திருந்த நிலையில், வடக்குக் கிழக்குத் தாயகத் தமிழர்கள் தமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நினைவேந்தலை நடத்தியிருந்தனர்.

மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்ல இராணுவம் முழுமையாகத் தடை விதித்திருந்தது. இதனால் தமது வீடுகளில் விளக்கேற்றி, போரில் உயிரிழந்த மாவீரர்களையும் தமது உறவினர்களையும் தமிழர்கள் நினைவு கூர்ந்தனர்.

இதேவேளை, மன்னார் பிரதேசத்தில் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது மாலை 6.05 க்கு தீபம் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் மாவீரர் நினைவேந்தலை நடத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை ஒன்றுகூட்டாது பிரத்தியேக இடம் ஒன்றில் நினைவேந்தல் இடம் பெற்றது.

எனினும், திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாண்மையான இடங்களில் மாவீரருக்கான நினைவு அஞ்சலி நிகழ்வுகள் அரிதாகவே காணப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலரே தமது வீடுகளில் தீபமேற்றினர்.

நேற்று வியாழக்கிழமை முதல் திருகோணமலை ஆலய வளாகங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் மக்கள் அச்சமடைந்து ஆலயங்களுக்குச் செல்லவில்லை.