இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்கு முறைக்கு மத்தியில்

உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம்

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தகவல்
பதிப்பு: 2021 மார்ச் 07 13:24
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 09 03:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
பலத்த சர்ச்சைகள், பல இழுபறிகள் மற்றும் தொடர் போராட்டங்கள் நிபுணர்கள் பலரின் வாதப்பிரதி வாதங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்ந முஸ்லிம் ஜகுஸாக்கள் கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகித நகர் எனும் கிராமசேவையாளர் பிரிவில் மஜ்மா நகர் எனும் பகுதியில் உள்ள சூடுபத்தின சேனை எனும் பகுதியிலேயே மேற்படி ஐனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாகக் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.


 
கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றினால் கொழும்பு முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் மரணமடைந்த முஸ்லிம் பெண்னொருவரினதும் குருநாகலை பொது வைத்தியசாலையில் மரணமடைந்த முஸ்லிம் ஆணொரு வரினதும் ஜனாஸாக்களே முதன் முதலாக ஒரே சமயத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் அடக்கம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கூர்மைச் செய்தித் தளத்தி்ற்கு மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இவ்விதம் முதன் முதலாக ஓரே சமயத்தில் அடக்கம் செய்யப்பட்ட வயோதிபர்களான ஆணும் பெண்ணும் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் மேற்படி முதல் இரண்டு ஜனாஸாக்களும் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மாலை 9 மணிவரை ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் முஸ்லிம்களின் ஜனஸாக்கள் அடக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எம்.எஸ்.சுபைர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அம்பாறை குருநாகல் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் சடலங்களே இவ்விதம் ஓட்டமாவடிக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து இரவு வரை குறித்த சூடுபத்தினசேனையில் மொத்தமாக ஒன்பது முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை உறவினர்களில் இருவர் வைத்தியாலைகளில் பார்வையிட அதிகாரிகளினால் அனுமதி வழங்கப்பட்டது எனவும் முன்னாள் அமைச்சர் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் மரணமடைந்து இலங்கையின் பல வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள மேலும் ஒன்பது முஸ்லிம் ஜனாஸாக்கள் நேற்றுச் சனிக்கிழமை மட்டக்களப்பு ஓட்டமாவடிக்கு எடுத்து வரப்பட்டு சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.