ஜெனீவா

தீர்மானத்தில் புவிசார் அரசியல் நோக்கம் மாத்திரமே என்கிறார் அனந்தி

உரிய நீதி கிடைக்கவில்லையெனவும் குற்றம் சுமத்துகிறார்
பதிப்பு: 2021 மார்ச் 27 06:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 29 16:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த செவ்வாய் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இன அழிப்பு தொடர்பிலான விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அதனை வெற்றுப் பிரேரணையாகவே தான் கருதுவதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கட்சியின் தலைவியும் வட மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தார். சொந்தத் தேசத்திலேயே ஒரு இன அழிப்பிற்கு முகம் கொடுத்து நீண்ட நாட்களாக உரிய நீதி அதற்கு கிடைக்கப்பெறும் எனும் எதிர்பார்பில் இருந்த ஒரு இனத்தின் அபிலாசைகளும் மற்றும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
கடந்த 23ம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானம் குறித்து கூர்மைச் செய்தித் தளம் அனந்தி சசிதரனிடம் கருத்துக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்ததாவது,

உலகின் பலமான நாடான சீனா தனது கால்களை இலங்கையில் தடம்பதித்துள்ள நிலையில் அதற்கு எதிராகத் தாமும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் எண்ணத்தின் அடிப்படை யிலேயே இந்தியா ஜப்பான் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது காய்களை நகர்த்தி வருகிறது. இந்த நகர்வுக்கு பொருத்தமான துரும்புச் சீட்டாக ஈழ தமிழர் விவகாரத்தை இந்த நாடுகள் கையில் எடுத்து இலங்கையை மிரட்டி வருகிறது.

இலங்கை தொடர்பாக தமக்கிடையிலான பந்தயத்தில் ஈழ தமிழர் விவகாரத்தை மேற் படி நாடுகள் கனகச்சிதமாக பயன்படுத்துகிறது. இவ்வாறான நிலையில் குறித்த நாடுகளுக்கு ஈழ தமிழர் விவகா ரத்தில் மானசீகமான ஆர்வமோ உண்மையான கரிசனையோ கிடையாது. இதய சுத்தியுடனும் தூய்மையான எண்ணத்துடன் அவர்கள் ஈழப் பிரச்சினையை என்றுமே அணுகவில்லை.

இந்து பசிபிக் நாடுகளில் தமது வல்லாதிக்கத்தை எவ்விதம் கடை பரப்பலாம் எனும் ஆக்கிரமிப்பு சிந்தனைக்குள் மூழ்கிய நிலையில் தமது தேசங்களின் நலன் சார்ந்த வகையில் அவர்கள் ஈழப்பிரச்சி னையை அணுகுகின்றனர். இதன் பின்னனியின் ஒரு அங்கமே இந்தியாவும் ஜப்பானும் வாக்களிப்பில் இருந்து நழுவி நடுநிலைமை எனும் போர்வை க்குள் மறைந்தமை ஆகும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு இலங்கை தமிழர் கள் மீதான இன அழிப்பினை நிருப்பிக்ககூடிய அனைத்து ஆவணங்களும் கடந்த காலங்களில் தாயகப்பகுதியில் இருந்து கடிதங்கள் மூலமாகவும் மின் அஞ்சல் மூலமாகவும் பெருவாரியாக அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த ஆவணங்கள் இன அழிப்பிற்கு ஈழ தமிழர்கள் உள்ளாகியுள்ளதை அச் சொட்டாக வெளிப்படுத்துகிறது. இவ்வகையான நம்பகமான ஆவணங்களைக் கைவசம் வைத்துக்கொண்டு அதன் மூலம் கடந்த காலத்தில் பௌத்த பேரினவாத இலங்கை அரசு தமிழ் இனம் மீது இன அழிப்பை மேற்கொண்டுள் ளதென்பதை இலகுவில் அனுமானித்து இன அழிப்பு நடந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபையால் ஆணித்தரமாக வெளிப்படுத்த முடியும்.

இலங்கைக்கு எதிரான பிரேரனையிலும் அதனை முன் வைத்து நிறைவேற்றி யிருக்கலாம். எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அதில் கோட்டைவிட்டுள்ளது.

மேலும் ஈழ தமிழர்கள் மீது இன அழிப்பு நிகழத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து கடந்த 11 வருடங்களாக ஒரு தீர்க்கமான முடிவொன்றுக்கு வரமுடியாது ஐக்கிய நாடுகள் சபை திணறுவது இதன் மூலம் புலப்படுகிறது. மேலும் முன்வைக்கப்பட்ட பிரேரனையில் போர்க்குற்றம் இரு தரப்பு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டு ள்ளன. கலப்பு பொறி முறை குறித்த பிரேரனையிலிருந்து காணாமல் போயுள்ளது. அத்துடன் ஈழத்தமிழ் மக்கள் கோரிய இன அழிப்புக்கான சர்வதேச நீதி குறித்து அதில் ஒரு வரிதானும் இடம் பெறவில்லை.

மேலும் இவ்விடயத்தில் நாசுக்காகவும் சாமர்த்தியமாகவும் இலங்கை செயல்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா ஜப்பான் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பார்வை தம்மீது இருத்தல் வேண்டும் எனும் நோக்கத்திலேயே அது காரியம் ஆற்றியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உள்ள மூன்று தீவுகளை சீனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தமை யாழ் பல்கலைக்கழக நினைவு தூபி இடிப்புச் சம்பவங்கள் போன்றவை மேற்படி நாடுகளை இலங்கை மீது ஈர்க்கச் செய்ய தத்ருபமாகக் கட்டமைக்கப்பட்ட உக்தியாகும். இதில் கொழும்பு வெற்றியடைந்துள்ளது. இதன் பலனாக இந்தியா ஐப்பான் ஆகியன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை மை வகித்து இலங்கைக்கு தனது விசுவாசத்தை நிருப்பித் துள்ளது.

மேலும் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரனை தொடர்பில் சமுக வலைத்தளங்கள் மூலம் மாபெரும் மாயை தோற்றுவி க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிறைவேற்றப்பட்ட பிரேரனை மூலம் தங்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் விரைவில் நிறைவேறவுள்ளதாகக் கருதுகின்றனர்.

இது தொடர்பில் ஆழ்ந்த அறிவு மற்றும் போதிய புரிதல் இல்லாமல் சாதாரண தமிழ் மக்கள் தமக்கிடையில் பரவிவரும் தகவல்கள் மூலம் தாயகத் தமிழ் மக்கள் எதனை யும் பெரிதாக அடையப்போவதி ல்லை. ஆக மொத்தத்தில் இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரனை என்னைப் பொறுத்தவரை காகிதத்திலான வெற்றுப் பிரேரனையே ஆகும்.

குறித்த தீர்மானத்தின் மூலம் ஒரு சில இராணுவ அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொ ண்டு பயணத்தடையினை விதிக்க கூடிய ஏதுவான சூழ்நிலையொன்று உருவா க்கியுள்ளது. இதைதவிர பிரேர னை மூலம் இன அழிப்பினை எதிர்நோக் கிய தமிழ் மக்களு க்கு பெரிதாக ஒன்றும் கிடைக் கப் போவதில்லை. இன அழிப் பைச் சந்தித்த மக்கள் மீண்டும் சர்வதேச ரீதியில் பூ கோள அரசியல் நகர்வில் காவு கொடுக்கப்பட்டுள்ளனர் என திருமதி அனந்தி சசிதரன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.