வடமாகாணம் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் இருந்து

பாக்கு நீரிணை ஊடாக நீச்சல் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்று திரும்பிய இலங்கை இராணுவச் சிப்பாய்

ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனையை முறியடிப்பதே நோக்கம் என்கிறார்
பதிப்பு: 2021 ஏப். 12 15:23
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 14 00:36
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
வட மாகாணம் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரிணை ஊடாக நீச்சல் மூலம் கடந்த சனிக்கிழமை இந்தியா தனுஷ்கோடி நோக்கிச்சென்ற 31 வயதுடைய றோசன் அபேயசுந்தர எனும் இலங்கை விமானப்படைச் சிப்பாய் ஒருவர் மீண்டும் நீந்தியே தலைமன்னாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தடைந்து சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து நீச்சல் மூலமாக இந்தியா தனுஷ்கோடி சென்றடைந்து மீண்டும் நீந்தியே தலைமன்னார் வந்தடைந்து உலக சாதனையை நிலைநாட்டி கின்னஸில் இடம்பிடித்த வடபுலத் தமிழரான ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனையை முறியடிக்கும் வகையிலேயே குறித்த நீச்சல் பயணத்தை தான் ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் தென் மாகாணம் காலி மாவட்டம் டலல்ல எனும் கிராமத்தைச் சேர்ந்த இலங்கை விமானப்படைச் சிப்பாயான றோசன் அபேயசுந்தர கடந்த சனிக்கிழமை 10 ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் தலைமன்னார் கரையிலிருந்து இந்தியா தனுஷ்கோடியை நோக்கித் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

பின்னர் இந்தியா தனுஷ்கோடியில் இருந்து மீண்டும் இலங்கை நோக்கி தனது நீச்சல் பயணத்தை தொடர்ந்த இவர் இன்று ஞாயிறு அதிகாலை 3.30 க்கு தலைமன்னார் கரையை வந்தடைந்ததாகத் தலைமன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

குறித்த இலங்கை விமானப்படை வீரர் கடந்த மார்ச் மாதம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கும் பின்னர் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும் நீந்தி உலக சாதனையை நிலைநாட்ட தயாரானார். எனினும் காலநிலை காரணமாக தலைமன்னார் கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டதினால் அன்றைய தினம் தனது நீச்சல் பயணத்தைக் கைவிட்டு அவர் கொழும்பு திரும்பினார்.

இந்தநிலையில் குறித்த விமானப்படைச் சி்ப்பாய் தனது முயற்சியை மீண்டும் ஆரம்பித்து அதில் வெற்றியடைந்துள்ளார். இவ்வகையில் 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 48 செக்கன்களில் இவர் 59.3 கிலோமீற்றர் தூரத்தை நீச்சல் மூலம் கடந்து உலக நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனையை முறியடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.