இலங்கை ஒற்றையாட்சி அரசின்

சட்டமா அதிபர் அரசியலில் ஈடுபட விருப்பம்

சஜித் அல்லது மைத்திரி அணியில் இணையவுள்ளார்
பதிப்பு: 2021 மே 06 22:24
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 08 23:11
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியதை ஏற்க மறுத்த இலங்கைச் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வாரென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
 
சட்டமா அதிபர் பதவியில் இருந்து விலகிப் பொதுமக்களுக்குச் சேவை செய்ய அரசியலில் ஈடுபடவுள்ளதாக கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

தன்னையும் சந்தித்துப் பேசியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், தப்புல டி லிவேரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோடு சட்ட விவகாரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்திற்கான தனியான சட்டமூலம். மாகாணசபைத் தேர்தல்களுக்கான புதிய தேர்தல் முறைகள் குறித்த பல்வேறு விவகாரங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.