ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் அதிகரிக்கும் முரண்பாடுகள்

புதிய அரசியல் அணியை உருவாக்கும் முயற்சியில் விமல் வீரவன்ச

பௌத்த பிக்குமார் குழு ஒன்றின் முயற்சியும் தோல்வியெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2021 மே 13 20:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 13 20:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பது தொடர்பாக பௌத்த குருமாரை மையப்படுத்திய உயர்மட்டக்குழு ஒன்றின் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன என்ற கூட்டணியில் இருந்து விலகி வேறொரு புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கிச் செயற்படுவதே விமல் வீரவன்ச போன்ற சில உறுப்பினர்களுடைய பிரதான நோக்கம் எனவும் இதனால் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்குள் ஏற்படவுள்ள பிளவுகளைத் தடுக்க முடியாதெனவும் சமதான முயற்சியில் ஈடுட்ட பௌத்த பிக்குமார் சிலர் கூறுகின்றனர்.
 
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவுடன் விமல் வீரவன்ச, உதயகம்பன்வில, ஆகியோர் நேரடியாகத் தொடர்பு கொண்டு புதிய அரசியல் கூட்டுத் தொடர்பாகப் பேசி வருவதாகவும் இதனால் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் அங்கம் வகிக்கும் வேறு சில சிறிய கட்சிகளும் அந்தப் புதிய கூட்டோடு இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொரோனா நோய்த் தாக்கம் அதிகமாகவுள்ளதால் தற்போதைக்குப் பாரிய அளவிலான குழப்பங்கள் ஏற்படாதெனவும் அதன் பின்னரான சூழலில் புதிய அரசியல் கூட்டணியின் உருவாக்கம் பற்றிய பேச்சுக்கள் சூடுபிடிக்குமெனவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.