சீன அரசினால் நிர்மாணிக்கப்படும்

கொழும்பு போட் சிற்றி, பசில் பதவியேற்கவுள்ள அமைச்சின் கீழ்

கோட்டபய ராஜபக்சவின் இல்லத்தில் கலந்துரையாடல்
பதிப்பு: 2021 ஜூலை 04 22:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 05 13:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ள பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இராஜாங்க நிதி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச நிதி வர்த்தக நகரம், இலங்கை முதலீட்டுச் சபை உள்ளிட்ட முக்கிய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் பசில் ராஜபக்ச பதவியேற்கவுள்ள அமைச்சின் கீழ் செயற்படும் எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி கோட்;டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
 
பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி மற்றும் அந்த அமைச்சின் கீழ் செயற்படவுள்ள அரச திணைக்களங்கள், அரச கூட்டுத் தாபனங்கள் குறித்த விபரங்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வர்த்தமானி இதழில் வெளியிடப்படவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரின் அமைச்சின் கீழ் இருக்கும் பல நிறுவனங்கள் பசில் ராஜபக்ச பதவியேற்கவுள்ள அமைச்சின் கீழ் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் 12 கூட்டுக் கட்சிகளின் தலைவர்களோடும் பசில் ராஜபக்ச ஒவ்வொரு நாளும் தனித்தனியாகச் சந்தித்து உரையாடி வருகின்றார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இருக்கக்கூடாதென பசில் ராஜபக்ச கூறியுள்ளார். அமைச்சர் விமல் வீரவன்சவைச் சந்தித்து உரையாடியபோதே அவர் கூறியிருக்கிறார்.