ஜோன் கொத்தலாவ

தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கைதான 31 பேருக்கும் நீதிமன்றம் பிணை- ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில்
பதிப்பு: 2021 ஜூலை 08 11:18
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 09 22:10
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக நகல் சட்ட மூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று வியாழக் கிழமை இடம்பெற்றபோது பாராளுமன்றத்திற்குச் செல்லும் பொல்துவ சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கொவிட் 19 நோய்ப் பரவலைத் தடுக்கும் சுகாதார விதிகளுக்கு முரணானது என பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், ஊடக தொழிற் சங்கங்கள், அரச தொழிற் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மற்றும் பௌத்த குருமார், பல்கலைக்கழக மாணவர்கள் என 31 பேர் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது.

ஆனால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இவர்களை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட மறுத்தது. ஆனாலும் பிணையில் விடுவிக்கப்பட்டு இவர்கள் வெளியே வந்தபோது ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலரைச் சுகாதாரப் பரிசோதகர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இவர்களைப் பொலிஸாரின் உதவியோடு வாகனங்களில் ஏற்றி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் கூடிநின்ற தொழிற் சங்கப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டன. ஜோன் கொத்தலாவ பல்கலைக்கழகம் தொழிற் சங்கங்களின் சுயாதீனச் செயற்பாட்டுக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் ஆபத்தானது எனக் குற்றம் சுமத்தியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சட்டமூலம் நிர்வாகத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு்ள்ளது. இராணுவத்தின் மூத்த அதிகாரியொருவர் துணைவேந்தராக அல்லது தலைமை அதிகாரியாக செயற்படுவார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.