இலங்கைத் தீவில் அதிகரிக்கும்

சிங்களக் கட்சிகளின் உள்ளக முரண்பாடுகள்

பசில் விமல் சந்திப்பு- ரணில் சஜித் தொடர் உரையாடல்
பதிப்பு: 2021 ஜூலை 18 23:05
புதுப்பிப்பு: ஜூலை 27 14:45
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கோட்டாபய மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான திஸாநாயக்கா, பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார். மூத்த உறுப்பினராக இருந்தும் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்றும் இது பழிவாங்கும் செயல் என கொழும்பில் சென்ற வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமா எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்க மறுத்த திஸாநாயக்கா, மூத்த உறுப்பினர்கள் பலர் அதிருப்தியோடு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகலாமென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் பசில் ராஜபக்ச தொடர்ச்சியாக சந்தித்து உரையாடுவதால், முரண்பாடுகளைக் கைவிட்டு பசில் ராஜபக்சவின் முயற்சிக்குக் கைகொடுப்பதென விமல் வீரவன்ச தற்போது முடிவெடுத்திருப்பதாகவும் மற்றுமொரு தகவல்கள் கூறுகின்றது. ஆனாலும் தனது உறுதியான நிலைப்பாடு தொடர்பாக விமல் வீவன்ச இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை.

இதேவேளை, அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகலாமெனவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடி வருவதாகவும் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவது பற்றிப் பேசுவதாகவும் கூறப்படுகின்றது.

பிரபல வர்த்தகர்கள் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.