எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள பிரேரணை தோற்கடிக்கப்படும்- அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு

எதிராக வாக்களிக்குமாறு அரசாங்க உறுப்பினர்களிடம் வேண்டுகோள்
பதிப்பு: 2021 ஜூலை 19 22:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 19 22:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கைத் தீவில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து எரிபொருள் சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடிக்குமென ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அதிகாரபூர்வமாக இன்று திங்கட் கிழமை அறிவித்துள்ளது. இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென அரசாங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுஜனப் பெரமுனக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
 
ஏரிபொருள் உயர்வைக் கண்டித்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக அமைச்சர்கள் சிலரும் வாக்களிக்கவுள்ளதாக காரியவசம் ஆரம்பத்தில் கூறியிருந்தார்.

அமைச்சர்கள் சிலரும் அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் முரண்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்தப் பிரேரணைக்கு எதிராக அரசாங்கம் வாக்களிக்குமென காரியவசம் கூறியுள்ளார்.

இந்தப் பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களைச் சமீபத்தில் சந்தித்து உரையாடியிருந்தார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவிதாரன உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டமைக்குத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இதற்கு விளக்கமளிக்க வேண்டுமெனவும் கேட்டிருந்தனர். எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர்.