இலங்கை அரசாங்கம்

ஜெனீவா அமர்வை வெற்றிகொள்ளும்- அமைச்சர் பீரிஸ்

ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 30 20:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 31 20:23
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வில் வருடம் தோறும் முன்வைக்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வை இலகுவாக வெற்றிகௌ்ள முடியுமெனவும் அவர் கூறினார். கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெனீவா அமர்வு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாதெனவும் கூறினார்.
 
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் இலங்கை குறித்த மீளாய்வுகள் நடைபெறும்போது, அதனை வெற்றிகரமாக இலங்கை அரசாங்கம் வெற்றிகொள்ளும். கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளது, அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், இலங்கைத்தீவில் அனைத்து மக்களும் இணைந்து வாழக்கூடிய தீர்வு உருவாக்கப்படுமெனவும் கூறினார்.

இதேவேளை, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுக்கு முன்னதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே கெழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரனுடன் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

விரைவில் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பேசவுள்ளதாகவும் கொழும்பில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தவொரு நிலையில் ஜெனீவா அமர்வை இலகுவாக வெற்றிகொள்ள முடியுமென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறியிருக்கிறார்.