இலங்கைத்தீவில்

அவசரகாலச் சட்டம் அமுல்- பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

ஜனாதிபதி அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றியுள்ளாரென எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 செப். 06 21:36
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 22:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொவிட் நோய்த் தொற்றைத் தடுத்தல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல் என்ற போர்வையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமுல்படுத்தப்படட அவசரகாலச் சட்டம் இன்று திங்கட்கிழமை இலங்கைப் பாராளுமன்றத்தில் 81 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் பெறப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார். இன்று காலை பத்து மணி முதல் மாலை வரை விவாதம் இடம்பெற்றது.
 
அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குபற்றி உரையாற்றினர். அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றும் நோக்கில் ஜனாதிபதிக்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

கொவிட் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டம் அவசியமற்றதெனவும், எதிர்க்கட்சிகளின் அரசியல் ரீதியான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவே இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் காரசாரமாகக் கூறினார்.

இலங்கைத்தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்தில் 180 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.