மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில்

மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 440 பொதிகளில் பாதுகாக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்

சடலங்கள் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்வில்லை- பேராசிரியர் ராஜ் சோமதேவா
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 03 15:54
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 04 08:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணத்தின் மன்னார் நகர நுழைவாசலில் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனை நிலைய வளாகத்தில், மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று வெள்ளிக்கிழமை 47ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றது. போர்க்காலத்துக்குரியதாக சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து இதவரை 66 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 56 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக எடுக்கப்பட்டு சுத்தம் செய்ய்ப்பட்டுள்ளன. 440 பைகளில் இந்த மனித எலும்புக் கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாக்கப்படுவதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறியுள்ளார்.
 
பெண்கள் பயன்படுத்தும் காப்புகள் மற்றும் இரண்டு தங்க மோதிரங்களும் எலும்புக்கூடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா குழுவினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அடையாளமிடப்பட்டிருந்த பகுதிகளில் இருந்த எலும்புக்கூடுகள் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. விற்பனை நிலைய கட்டத்தின் வளாகப் பகுதியின் நுழைவுப் பகுதியிலேயே அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.

வுிற்பனை நிலைய வளாகத்தின் நாடுவில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் இருந்து சிறிய தூரத்தில் உள்ள நடைபாதையில், ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்தில் இருந்தும் மனித எலும்புகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து தாய் மற்றும் குழந்தையின் எலும்புக் கூடுகள் கடந்த வாரம் மீட்கப்பட்டிருந்தன.

முதிர்ந்த ஒருவரின் எலும்புக் கூட்டுடன் ஒட்டியிருந்த களிமணல்களை அகற்றியபோது குழந்தைப் பிள்ளையின் சிறிய எலும்புக்கூடு ஒன்றும் இணைந்து காணப்பட்டது.

அதேவேளை,மனிதப் புதைகுழியில் சடலங்கள் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை என்பதை மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் இருந்து அறிய முடிவதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்திருந்தார்.

அவசர அவசரமாக சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்திருந்தார். இவர் எலும்புகளை ஆய்வு செய்யும் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.