இலங்கைத்தீவில்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது

ஒரு நாளில் மரணிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம்
பதிப்பு: 2021 செப். 17 09:44
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 21 02:26
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவு முழுவதிலும் தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கப்பட்டு வருகின்றது. 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படவிருந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமற்ற முறையில் மதுபானச்சாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்ததால் இலங்கைத்தீவின் அனைத்து மதுபானச் சாலைகள் முன்பாக மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
 
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திவிட்டு அரசாங்கம் மறைமுகமாக வர்த்தக நிலையங்களைப் பின்கதவால் திறப்பதற்கு அனுமதிப்பதால் கொவிட் நோய்த் தொற்று அதிகரிக்குமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை, மதுபானச்சாலைகள் அதிகாரபூர்வமற்ற முறையில் திறப்பதற்கு அனுமதியளித்தமை குறித்து இலங்கை மருத்துவர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளினால் நோய்த் தொற்று அதிகரிக்குமெனவும் அது சமூகத் தொற்றாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரட்ன செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நோய்த் தொற்றினால் மரணிப்போரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமாகவுள்ளது. இது குறித்துச் சுகாதார அமைச்சு மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரித்துமுள்ளது.