இலங்கைத்தீவில்

கொவிட் தடுப்பு நடவடிக்கை- புதிய விதிகள் அமுல்

இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சான்றிதழ் கட்டாயம்
பதிப்பு: 2021 ஒக். 01 09:26
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 03 09:32
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்குப் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதில் இருந்து இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட சான்றிதழ் அட்டைகள் வைத்திக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நடைமுறை தற்போதைக்கு அமுலுக்கு வராதெனவும் இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
 
இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியவர்களே செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பொது இடங்களில் நடமாட முடியுமென ஏற்கனளவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இவ்வாறான சட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாதென சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏனைய புதி விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து படைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் நோய் அல்லாத மரணச் சடங்குகளில் 24 பேர் கலந்துகொள்ள முடியுமெனவும் திருமணம் பதிவுத் திருமணங்களில் 25 பேர் பங்குபற்றலாமெனவும் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் வேறு புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுமெனவும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.