பண்டேரா பேப்பர்ஸ் ஆவண விவகாரம்-

நிருபமா ராஜபக்சவின் சொத்துக்களை வெளிப்படுத்தவும்

ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் வேண்டுகோள்
பதிப்பு: 2021 ஒக். 17 21:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 21 14:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பண்டேரா பேப்பர்ஸ் ஆவண விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் சொத்து விபரங்களை ராஜபக்ச அரசாங்கம் வெளியிட வேண்டுமென கொழும்பில் இருந்து இயங்கும் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் (Transparency International) வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள இந்த மூன்று அரச நிறுவனங்களும் நிருபமா ராஜபக்சவின் சொத்து விபரங்களை உடனடியாக வெளிப்படுத்தி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளது.
 
பணத்தூய்மைப்படுத்தல் இடம்பெற்றிருக்கக்கூடுமா என்பது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிடமும் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

1975 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பதவி வகிக்கும் மூத்த அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.

சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க அரசாங்கம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென என ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் கோரியுள்ளது.

நிருபமா ராஜபக்சவின் பெயரில் வைப்பில் உள்ள அனைத்துப் பணங்களும் ராஜபக்ச குடும்பத்துக்குரியதென எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.