இலங்கைத்தீவில் வாழும்

ஏனைய சமூகங்களைத் தாக்கவா ஒரே நாடு ஒரே சட்டம்

நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி கேள்வி- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தடுமாறினார்
பதிப்பு: 2021 நவ. 10 22:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 01:34
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் மீது தாக்குதல் நடத்தவா ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டதென ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் ஆரம்பத்தில் இடம்பெற்ற உறுப்பினர்களுக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தியதால் இன்று இலங்கைத்தீவு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகக் கூறிய அனுரகுமார திஸாநாயக்கா, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரரின் தகுதி தொடர்பாகக் கேள்வி தொடுத்தார்.
 
நீதியமைச்சருக்குத் தெரியாமல் சட்டம் தொடர்பான செயலணி ஒன்றை எவ்வாறு ஜனாதிபதி உருவாக்கினாரெனவும் கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

அமைச்சர்கள் பலர் ஜே.வி.பி உறுப்பினர்களுடன் தர்க்கப்பட்டனர். கேள்விக்குப் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, செயலணிகளை உருவாக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.

ஆனாலும் அனுரகுமார திஸாநாயக்கா தொடர்ச்சியாகக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயங்கிய அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, தடுமாற்றத்துடன் சமாளித்துப் பதில் கூறினார்.