பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து

பங்காளிக் கட்சிகள் விலகத் தீர்மானம்

வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெருக்கடியை எதிர்நோக்கும் ராஜபக்ச கூட்டணி
பதிப்பு: 2021 நவ. 13 21:00
புதுப்பிப்பு: நவ. 13 21:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் பங்காளிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி வெளியேறத் தீர்மானத்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. பிரதான பங்காளிக்; கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மக்கள் விரோத செயல்கள் குறித்து கலந்துரையாட வேண்டுமெனப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கோரியதாகவும் ஆனாலும் இதுவரை அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவத்தார்.
 
இவ்வாறான தொரு நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருப்பதில் அர்த்தம் இல்லையெனவும் விலகுவதே மேலானதென்றும் திஸ்ஸவிதாரன கூறினார்.

லங்கா சமசமாஜக் கட்சியின் அடுத்த அரசியல் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோதித்து அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸவிதாரன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவோடு முரண்பட்டுள்ள. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டாக வெளியேறவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தற்போது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பங்காளிக் கட்சிகள் வெளியேறினால் மூன்றில் பெரும்பான்மை கிடைக்காதெனக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலர். முரண்படும் கட்சிகளை அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாமெனப் பகிரங்கமாகக் கூறியிருந்தன. இதனாலேயே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

திஸ்ஸவிதாரவின் இந்த அறிவிப்பு அரசாங்கத்துக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.