கொவிட் 19 நோய்ப்பரவலைத் தடுக்கும் புதிய விதிமுறைகளினால்

எதிரணியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை-

அரசாங்கம் அவசர அறிவிப்பு- மாவீரர் வாரமும் தடைக்குக் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகம்
பதிப்பு: 2021 நவ. 15 21:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 17 23:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாளை செவ்வாய்க்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பொது ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்கள் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கொவிட் 19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய சுகாதார விதிமுறை இன்று திங்கட்கிழமை மாலை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறையிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அசேல குணவர்தன தடைவிதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
 
எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இந்த விதிமுறை கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் எனவும் ஆனாலும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொது ஒன்றுகூடல்களுக்கான தடை தொடருமெனவும் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வழிபாட்டுத் தளங்களில் ஒருவர் மாத்திரமே வழிபட முடியுமெனவும் பக்தர்கள் ஒன்றுகூட அனுமதியில்லையெனவும் விசேட மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாளை ஊர்வலமாகக் கொழும்புக்கு வரும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள்; பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் பின்னர் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இதுவரை எதுவும் கூறவில்லை. புதிய விதிமுறைகளை மீறி எவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவரென இலங்கைப் பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கிலும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டப் பேரணியைக் காணரம்கூறி பொதுக் கூட்டங்கள். பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவித்ததா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.