இலங்கைத்தீவின் தலைநகர்

கொழும்பில் நடந்த எதிர்க்கட்சியின் போராட்டம் தோல்வி

பெறுமளவு மக்கள் பங்குபற்றவில்லை- வீதிகளில் அளவுக்கு அதிமான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிப்பு
பதிப்பு: 2021 நவ. 16 23:40
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 17 22:12
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி வெற்றி பெறவில்லை. வெளி மாவட்டங்களில் இரு பேரணியாக வாகனங்களில் ஆதரவாளர்கள் கொழும்பு நகரை நோக்கி வந்தனர். எதிர்பார்க்கப்பட்ட மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. வன்முறைகள் எதுவும் இன்றி ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற சிறிய எதிர்க்கட்சிகள் எதுவும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
 
பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கொழும்பு நகரில் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸாரின் தடைகளையும் மீறி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகருக்குள் வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கர்சா டி சில்வா தெரிவித்தார்.

ஆனால் பொலிஸார் தடைகளை விதிக்கவில்லையென்றும் சுகாதார விதிகளை மாத்திரமே பொலிஸார் பேணியதாகவும் அமைச்சர் டளஸ் அழகப் பெருமா தெரிவித்தார்.

இதேவேளை, ராஜபக்சக்களின அரசாங்கத்துக்கு எதிரான உணர்வோடுதான் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பலமான எதிர்க்கட்சி இல்லையென ஐக்கிய சோசலிச முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளைத் தாண்டி மக்கள் இயல்பாகவே வீதிக்கு இறங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தினால் அளவுக்கு அதிமான பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் கொழும்பு நகர வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.