வடமாகாணம்

முல்லைத்தீவில் மாவீர் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை

47 பேரின் பெயர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன-
பதிப்பு: 2021 நவ. 17 21:00
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: நவ. 22 07:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி (நவம்பர் மாதம்) துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு இலங்கை இராணுவத்தின் பல தடைகளுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடைவிதித்து வருகின்றது.
 
இந்த நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யும் நோக்கில் முல்லைத்தீவுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று புதன்கிழமை மாங்குளம் நீதிமன்றில் முல்லைத்தீவுப் பொலிஸாரினால் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் 47 பேருக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன்,சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா(கரன்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் ,பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்),சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா , முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகியயோர் உட்பட 47 பேருக்கும் மற்றும் இவர்களது குழுவினர்களுக்குமே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

ஆனால் தடையுத்தரவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ்த்தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.