இலங்கைத்தீவில் தலைநகர் கொழும்பு

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது- வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்பனை

எதிர்த்து கொழும்பில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- எரிபொருட்களுக்கு மக்கள் வரிசையில் காத்திருப்பு
பதிப்பு: 2021 நவ. 17 23:44
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 21:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமைக்கும் அதனை வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யவுள்ளதையும் கண்டித்து இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை மின்சாரத்துறையின் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இலங்கைத்தீவு முழுவதும் மின் துண்டிக்கப்படும் நிலை வந்துவிட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்குச் சுத்தமான எரிபொருளை சப்புகஸ்கந்த நிலையம் வழங்கி வந்ததாகவும் 60 சதவீத எரிபொருட்கள் ,அங்குதான் சுத்திகரிக்கப்படுவதாகவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.

அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் வெளிநாட்டு நிறுவனத்தினால் வேறொரு தேவைக்குப் பயன்படுத்தப்படவுள்ளதென்றும் ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.

மின்சக்தி எரிபொருட்துறை அமைச்சர் உதயகம்பன்வில அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார். ஆர்ப்பாட்டக்கார்கள் கூறுவது உண்மை என்றும், அமைச்சர் ஒருவர் அரச நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறாரெனவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால், கடந்த ,இரண்டு நாட்களாகக் கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.

சமையல் எரிவாயுவுக்கும் கடந்த ,இரண்டு வாரங்களாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 50 நாட்களுக்கு மத்திரமே மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் ஊழியர்கள் அதனை மறுத்துள்ளனர்.