இலங்கைத்தீவில்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

மூன்று நாடு்களில் 37 பேர் உயிரிழப்பு
பதிப்பு: 2021 நவ. 20 19:18
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 20:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொவிட் 19 நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 37 உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனச் சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. சென்ற புதன்கிழமை முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, இலங்கை மருத்துவர் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வழமைபோன்று பொது இடங்களுக்குச் செல்வதாகவும் சுய கட்டுப்பாடுகளைப் பேணுமாறும் மருத்துவர் சங்கத் தலைவர் பத்மா குணரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்னும் ஒருவாரத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கையும் உயிரிழப்பும் மீண்டும் அதிகரித்தால் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுமென சுகாதா அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 09 பெண்களும் 13 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.