இலங்கை அரசாங்கத்தின் நிதி நெருக்கடி விவகாரம்-

டொலர்களின் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்

ஆனால் எதிர்க்கட்சி மறுப்பு
பதிப்பு: 2021 டிச. 29 21:28
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 30 12:49
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
டொலர்களின் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளமை உண்மைக்கு மாறானதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 3.1 பில்லியன்களாக அதிகரித்துள்ளதென்று அஜித் நிவாட் கப்ரால் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நளின் பண்டார, கடந்த வாரம் 1.6 பில்லியன்களாக இருந்து திடீரென எவ்வாறு 3.1 பில்லியன்களாக உயர்வடைந்தது என்று அஜித் நிவாட் கப்ரால் கூற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
 
அரசாங்கத்திடம் செலவழிக்க முடியுமான டொலர்களாக 1.1 பில்லியன் டொலர்களே இருந்தது என்றும் மீதமுள்ளவை தங்கம் மற்றும் பிற வகையானதாகும் எனவும் கூறிய நிலையில், தற்போது 3.1 பில்லியன்கள் இருப்பதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது என்று நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மத்திய வங்கியின் கடந்த நவம்பர் மாத அறிக்கைக்கும் நிதி தொடர்பாக அரசாங்கம் தற்போது கூறுகின்ற தரவுகளுக்குமிடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியுள்ள பொருளாதார நிபுணர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா, 3.1 பில்லியன்களாக டொலர் அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் தனியார் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.