உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும்

கொழும்பு பொரல்லை தேவாலய குண்டு மீட்பு விசாரணைகளில் நம்பிக்கையில்லை- சஜித்

தமது அரசாங்கமே விசாரணை நடத்தும் என்கிறார்
பதிப்பு: 2022 ஜன. 17 22:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 17 23:09
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு பொரல்லை தேவாலய வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டு தொடர்பான விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள சஜித் பிரேமதாச, இதன் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார். மஸ்கெலியாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறினார்.
 
விசாரணைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்தின் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் பதவியேற்றதும் இந்த விசாரணைகளைத் துரிதப்படுத்தும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

இதேவேளை, கொழும்பு பொரல்லை தேவாலய வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டு தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் சிசிரி கமராக்களில் காணப்பட்ட குறித்த நபர் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிசிரி கமாராக்களில் உள்ள பதிவுகளை உரிய முறையில் பொலிஸார் பரிசோதிக்கவில்லையென பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்த குற்றச்சாட்டையும் பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது.