கோட்டாவுக்கு எதிரான பேரணிகள்

காலிமுகத்திடல் போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தடை

இளைஞர்கள் அறிவிப்பு- மே தின ஊர்வலத்துக்கு அரசியல்வாதிகள் ஏற்பாடு
பதிப்பு: 2022 ஏப். 29 19:48
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஏப். 29 19:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
எதிர்வரும் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மே தினம் அன்று நடைபெறவுள்ள அரசியல் கட்சிகளின் பேரணிகள, பாதயாத்திரைகள் எதுவும் காலி முகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்துடன் இணைய முடியாதென போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் கலப்புகள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்பதால். மே தினம் அன்று கொழும்பில் ஊர்வலம், பேரணிகள் நடத்த நடத்தவுள்ள அரசியல் கட்சிகள் எந்தவொரு காரணம் கொண்டும் காலிமுகத்திடலுக்கு வரக்கூடாதென அறிவுறுத்தியுள்ளனர்.
 
காலிமுகத் திடல் போராட்டத்துக்கு வெளியில் நின்று ஆதரவு வழங்குமாறும் கட்சி அரசியலில் ஈடுபடாத பொதுமக்கள் மாத்திரNமு காலிமுகத் திடல் போராட்டத்தில் பங்கெடுக்க முடியுமெனவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மே தினம் அன்று தமது கட்சி ஆதரவாளர்களை காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவித்திருந்தார்.

இதனையடுத்தே காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர் குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

மே தினம் அன்று கொழும்பில் சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் பேரணிகள், ஊர்வலங்களை நடத்தவுள்ளன. கோட்டாபயா ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலவேண்டுமென வலியுறுத்தியே பேரணிகள் நடைபெறுமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.