கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம்

நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்கிறார் அமைச்சர் தினேஸ்

ஆதரவாக வாக்களிக்கமாட்டோம் என்கிறார் வாசுதேவ நாணயக்காரா
பதிப்பு: 2022 மே 04 09:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 11:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று மொழிகளிலும் கையளிக்கப்பட வேண்டும் என்றும் குறைந்தது ஒருவாரம் அதனை வாசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அமைச்சர் வெளியிட்டார்.
 
அரசாங்கத்துக்குப் பெரும்பான்மைப் பலம் உண்டு. எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று அரசாங்கம் பலமிழக்கவில்லை. எதிர்க்கட்சிகளே பலவீனமாகவுள்ளன. ஆகவே நிச்சயம் இந்தப் பிரேரணையை வெற்றி கொள்வோமென தினேஸ் குணவர்த்தன கூறினார்.

அதேவேளை, அரசாங்கத்தில் இருந்து வெளியேறிச் சென்று சுயாதீனமாக இயங்கும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர். இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள வாசுதேவ நாணயக்கார,

அரசாங்கத்துடன் முரண்பட்டாலும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடமளிக்க முடியதெனக் கூறினார்.