இலங்கைத்தீவில்

பாரிய பொருளாதார நெருக்கடி- ரணில் எச்சரிக்கை

மக்கள் தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனவும் கூறுகிறார்
பதிப்பு: 2022 மே 16 22:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 17 10:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இரண்டாயிரத்து 300 பில்லியன் ரூபா வருமானம் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதன் உண்மை வருமானம் ஆயிரத்து 600 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனம் மூவாயிரத்து 300 பில்லியன் ரூபா என்று காண்பிக்கப்பட்டிருந்தாலும் அரசாங்கத்தின் முழுமையான செலவீனம் 4000 பில்லியன் ரூபா எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
 
இந்த ஆண்டுக்கான துண்டுவிழும் தொகையாக இரண்டாயிரத்து 400 பில்லியன் ரூபா என்றும் இன்று திங்கட்கிழமை மாலை அரச தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றியபோது கூறினார்.

மருந்து, சத்திர சிகிச்சை உபகரணங்கள், நோயாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் விநியோகத்தர்களுக்கு நான்கு மாதங்களாக பணம் செலுத்தவில்லை. இவர்களுக்கு 34 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையாகச் செலுத்த வேண்டியுள்ளது. 18 வகையான மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு கடந்த ஆண்டு 45 பில்லியின் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தனியாருக்கு விற்பனை செய்யத் தீர்மானித்தாலும். அதன் கடன்களை அரசாங்கமே செலுத்த வேண்டும் என்றும் கூறிய ரணில் விக்கிரமசிங்க, ஐந்து மில்லியன் டொலரைக்கூட நிதியமைச்சினால் பெற முடியவில்லை என்றும் விபரமாகக் கூறினர். அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலும் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் கூறினார்.

இதேவேளை, பிரதான அரச வங்கியான இலங்கை மக்கள் வங்கி மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த வங்கியில் இருந்தே பெருமளவு நிதியை ராஜபக்ச அரசாங்கம் கைமாற்றியதாக உயர் அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்குவதற்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் அமெரிக்க டொலரை கூட நிதி அமைச்சினால் தற்போது பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் செலவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடியாகத் தேவை. ஆனாலும் அதனைப் பெறுவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.