கோட்டாவுக்கு எதிரான போராட்டம்-

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் நகல் வரைபு

அமைச்சரவையில் சமர்ப்பிப்பு- 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம்
பதிப்பு: 2022 மே 23 21:32
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 27 09:34
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு கோரி காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கான நகல் வரைபு இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 21 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த குழு தயாரித்த பரிந்துரைகளே நகல் வரைபாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கவனத்துக்கும் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டு முழுமையான நகல் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விவாதம் ஆரம்பமாகவுள்ளது. ஆனால் நகல் வரைபு மீதான வாக்கெடுப்பு எப்போது நடைபெறுமெனக் கூறவில்லை.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் முக்கியமானவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்துவது, அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நியமனம் செய்யும் முறையை ரத்துச் செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நகல் வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் வரைபை தயாரித்ததாகவும் கூறப்படுகின்றது.