கொழும்பில் இடமபெற்ற வன்முறைகள்

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசதரப்பு உறுப்பினர்கள் பலர் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நீதிபதி முன்னலையில் தெரிவிப்பு
பதிப்பு: 2022 மே 25 08:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 26 22:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்த கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற மைனா கோ கம தாக்குதல் குறித்த வழக்குகள் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள் இதுவரையில் தமது கடவுச்சீட்டை கொழும்பு நீதிமன்றில் ஒப்படைக்கவில்லையென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதல்கள் சென்ற ஒன்பதாம் திகதி நடைபெற்றிருந்தன.
 
கோட்டை நீதவான் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ச சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மஹிந்த கஹந்தகம மற்றும் பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரேணுகா பெரேரா ஆகியோர் தமது கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷந்தவின் கடவுச்சீட்டு வேறொரு குற்றச் செயல் தொடர்பான வழக்கு ஒன்றில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.