கோட்டாவுக்கு எதிரான பேராட்டம் ஐம்பது நாட்கள்

கொழும்பில் ஒன்றுகூடிய இளைஞர்கள்- நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறிப் போராட்டம்

பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
பதிப்பு: 2022 மே 28 07:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 29 12:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஐம்பது நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி காலிமுகத் திடலில் தொடர் போராட்டம் ஆரம்பமாகியது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலகுமாறு வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்ற ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அலரி மாளிகை முன்பாக தொடர் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
 
இந்த நிலையில் இன்று காலிமுகத்திடலில் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. கொழும்பின் புறநகர் பகுதிகளில் இருந்து பேரணியாக வந்த இளைஞர்கள், யுவதிகள் காலிமுகத்திடலில் ஒன்றுகூட முற்பட்டனர்.

ஆனால் பொலிஸார் கொள்பிட்டிச் சந்தியில் தடுத்து நிறுத்தினர். கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இன்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியிலிருந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றம் சனிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறிப் பேரணி நடைபெற்றது. பொலிசார் தடுத்தபோதும், இளைஞர்கள் பலர் காலிமுகத்திடலுக்குச் சென்று அங்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்தப் போராட்டத்தினால் வெள்ளிக்கிழமை பிற்பகல் முன்று மணியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.