வடமாகாணம்

யாழ் நூலக எரிப்பு நினைவுகூரல் கொழும்பு காலிமுகத் திடலில்

சிங்கள இளைஞர்கள் ஏற்பாடு
பதிப்பு: 2022 ஜூன் 01 22:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 00:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
யாழ் நூலகம் எரிக்கப்பட்டு நாற்பத்தியொரு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு. கொழும்பு காலிமுகத் திடலில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், தீபம் ஏற்றி நினைவு கூர்ந்தனர். கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், யாழ் நூலக எரிப்புக்குக் கண்டனம் வெளியிட்டதுடன் இனவாதச் செயல் இனிமேலும் தொடர இடமளிக்க முடியாதெனவும் கூறினர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நினைவு கூரும் நிகழ்வில், சிங்கள முற்போக்காளர்கள், சிங்கள மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்குபற்றினர்.
 
நூலக எரிப்பை நினைவூட்டி நிகழ்வுகள் இடம்பெற்றாலும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனரீதியான வன்முறைச் சம்பவங்கள் என்றோ, சிங்கள அரசியல் தலைவர்கள் எல்லோரும் இனப்பிரச்சினைக்கான பொறுப்பை ஏற்றுத் தீர்வை முன்வைக்க வேண்டுமென்றோ எதுவுமே கூறப்படவில்லை.

மாறாக இன நல்லிணக்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டுமென்ற தொனியில், வடக்குக் கிழக்குத் தமிழர்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான சிங்கள மக்களின் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் யாழ் நூலக எரிப்பு நிகழ்வு என்ற போர்வையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்வைக்கப்பட்டன.