பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர் காரணமாக

கொழும்பில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்து- மாநகர சபை எச்சரிக்கை

60 வீதமானோர் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் மேயர்
பதிப்பு: 2022 ஜூன் 02 20:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 05 23:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு நகரில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ளதாக கொழும்பு மாநாகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களைப் பயமுறுத்தவில்லை என்றும் ஆனால் வரவுள்ள உணவு நெருக்கடி பற்றி மக்களைத் தயார்ப்படுத்தவே இதனைக் கூறுவதாகவும் அவர் சொன்னார். கொழும்பு நகர மொத்த சனத்தொகையில் குறைந்த வருமானம் பெறும் சுமார் 60 வீதமானோர் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ரோசி சேனநாயக்கா கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
 
உணவுப் பஞ்சத்தைக் குறைந்த பட்சம் நிவர்த்தி செய்ய கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணியை கொழும்பு மாநகர சபை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் நகரவாசிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டம், உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் ஏனைய நன்கொடை நிறுவனங்களுடன் கொழும்பு மாநகர சபை கலந்துரையாடிக் கொண்டிருப்பதாகவும் ரோசி சேனநாயக்கா கூறினார்.