இலங்கைத்தீவில் பொருளாதார நெருக்கடி

எரிபொருட் கப்பல் மேலும் தாமதம்- மன்னிப்புக் கேட்டார் அமைச்சர்

கொழும்பில் அடுத்த வாரமும் பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மூடப்படுமெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2022 ஜூன் 24 23:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 25 14:13
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
எரிபொருட்களை ஏற்றிவரும் கப்பல் மேலும் தாமதமடைவதால், எரிபொருள் விநியோகம் மேலும் சில நாட்கள் தள்ளிப்போகுமென அமைச்சர் கஞ்சன விஜேரட்ன தெரிவித்துள்ளார். இதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் அவர் கூறினார். எரிபொருட்கள் இல்லாமையினால் கொழும்பில் இந்தவாரம் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. வெளி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பாடசாலைகள், அரச நிறுவனங்கள் செயற்பட்டு வந்தன.
 
இந்த நிலையில் எரிபொருள்களை ஏற்றிவரும் கப்பல் மேலும் தாமதமடைவதால், அடுத்த வாரமும் கொழும்பில் பாடசாலைகள், அரச நிறுவனங்கள் செயற்பட முடியாதென அரசாங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, எரிபொருள் வழங்கப்படவில்லையானால். அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்குச் செல்வதை நிறுத்தவுள்ளதாக கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்ட ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பளத்திற்குச் சமமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், சம்பள அதிகரிப்பு அல்லது எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.

இதே கோரிக்கையை அரச ஊழியர் சம்மேளனமும் முன்வைத்துள்ளது.