இலங்கைத்தீவு முற்றாக முடங்குகிறது

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருட்கள் கையிருப்பு

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு முற்றாகத் தடை- அமைச்சர் பந்துல அறிவித்தார்
பதிப்பு: 2022 ஜூன் 27 23:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 28 02:18
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருட்கள் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாளை முதல் யூலை மாதம் பத்தாம் திகதி வரை, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறும் அமைச்சர் கேட்டுள்ளார். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
 
கொழும்பில் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் பத்தாம் திகதி வரை மூடப்படும் என்றும், வெளி மாவட்டங்களில் இயங்கக்கூடிய பாடசாலைகள் நாட்களைக் குறைத்து இயங்க முடியுமெனவும் அமைச்சர் கூறினார்.

எரிபொருட்கள் கையிருப்பில் குறைவடைந்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் வரை, பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டுமெனவும் பத்தாம் திகதிக்குப் பின்னர் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் எனவும் பந்துல குணவர்த்தன கூறினார்.

இதேவேளை. பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் மக்கள் போராட்டம் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இருப்பதாக தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.