இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஜனாதிபதித் தெரிவுக்கு மூவர் போட்டி- சஜித் விலகினார்

ரஜபக்ச குடும்பதின் கட்சிக்குள் பிளவு- ஒருபகுதி ரணிலையும் மற்றைய பகுதி டளஸை ஆதரிக்கவும் முடிவு
பதிப்பு: 2022 ஜூலை 19 16:11
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 19 16:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில், புதன்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பில் மூன்பேர் போட்டியிடுகின்றனர். தற்போது பதில் ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்காபொதுஜன பெருமனக் கட்சியின் மூத்த உறுப்பினர் டளஸ் அழகபெரும ஜே.வி.பி எனப்படும் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வேட்புமனுத் தாக்கலில், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவாத்தாட்சி அதிகாரியாகச் செயற்பட்டார்.
 
ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஸ் குணர்த்தன முன்மொழிந்தர். மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார். டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடியபோது, இந்த வேட்புமனுத் தாக்கல்கள் இடம்பெற்றன.

ஜனாதிபதியாக டளஸ் அழகபெருமா தெரிவானால், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவைப் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் தவிசாளர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகப் பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளனர்.

ஆனால் பெரமுனக் கட்சியின் தலைவர் பேராசரியர் பீரிஸ், டளஸ் அழகபெருமாவை ஆதரிக்கவுள்ளார். இதனால் ராஜபக்ச குடும்பம் உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்கள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

அதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஐம்பது உறுப்பினர்களில் சுமார் இருபது உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சஜித் அணியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப்பினர்கள். இதனால் ரணில் விக்கிரமசிங்க அவர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளர்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னரான சூழலில், தென்னிலங்கைப் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டுச் சிதறுண்டு வருவதைப் பகிரங்கமாகவே அவதானிக்க முடிகின்றது.